சொமேட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் ஆர்டரை வாங்குவதற்காக உணவகம் ஒன்றுக்குச் சென்று சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்துள்ளார். ஆர்டர் தயாராக இருந்தும் வழங்கப்படாததால், அது குறித்து உணவக மேலாளரிடம் பணிவாகக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த உணவக மேலாளர் ஆத்திரமடைந்து, “எனக்குத் தோன்றும் போது தான் கொடுப்பேன், அமைதியாக உட்கார்; அதிகமாகப் பேசினால் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்” என முரட்டுத்தனமாக வசைபாடி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த ஊழியர் தனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ எனப் பீதியடைந்துள்ளார்.
உணவு விநியோக ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் மனிதர்களே என்றும், அவர்களை இழிவுபடுத்துவதும் மிரட்டுவதும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் குறித்துச் சொமேட்டோ நிறுவனம் உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்த உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் மேலும் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இணையத் தயாராக இருப்பதாக தவெக நிர்வாகி செங்கோட்டையன் பேசிய பேச்சு,…
ஹைதராபாத் கச்சிபௌலியில் உள்ள அஞ்சையா நகரில் அமைந்திருந்த 7 மாடி கட்டிடம் ஒன்றை ஹைட்ரா நிர்வாகம் இடித்துத் தள்ளியுள்ளது. அருகில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு…
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், எதிர்பாராத ஒரு நபர் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். லா ஜொல்லா பகுதியில்…
சென்னைக்கு அருகிலுள்ள பரந்தூர் பகுதியில் 2-வது புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக தமிழ்நாடு அரசு…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற 'சத்ரோன் கி கூஞ்ச்' என்ற இளைஞர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…