திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் கனிமொழி, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிட வேண்டும் என 65-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலக்கியவாதியாக இருந்து அரசியலுக்கு வந்த அவர், தற்போது தென் தமிழகத்தின் முக்கிய முகமாகப் பார்க்கப்படுவதால், மாநில அரசியலில் அவர் நேரடியாகப் பங்கேற்பது கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், கனிமொழி மாநில அரசியலுக்கு வருவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. மறைந்த முரசொலி மாறனைப் போலவே, டெல்லி அரசியலை லாவகமாகக் கையாளக்கூடிய ஒரு நபர் கலைஞர் குடும்பத்திலிருந்து தேவை என்பது திமுக தலைமையின் எண்ணமாக உள்ளது. காங்கிரஸ் உடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தேசிய அளவிலான அரசியல் நகர்வுகளில் கனிமொழி ஆற்றி வரும் முக்கியப் பங்கைத் தலைமை தற்போதைக்கு மாற்ற விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
மற்றொரு புறம், திமுகவில் அடுத்தகட்ட வாரிசு அரசியல் நகர்வுகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கனிமொழியின் மாநில அரசியல் வருகை அதிகாரப் பகிர்வில் சில சவால்களை உருவாக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இதனால் அவர் டெல்லி அரசியலிலேயே தொடர வேண்டுமா அல்லது தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமா என்பதில் திமுக தலைமை இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. இந்தச் சூழலில், கனிமொழியின் அரசியல் பயணம் டெல்லியை நோக்கியதா அல்லது கோட்டையை நோக்கியதா என்பது இன்னும் சில தினங்களில் வேட்பாளர் பட்டியல் மூலம் தெளிவாகிவிடும்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…