சென்னை ஊர்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண் அவரது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணின் மொபைல் போனுக்கு whatsapp மூலம் ஒரு வீடியோ வந்தது. வீடியோவை அந்த பெண் ஓபன் செய்து பார்த்தபோது அவரும், அவருடைய கணவரும் தனிமையில் இருந்து காட்சிகள் இருந்தன. இந்த வீடியோவை பெண்ணிற்கு அனுப்பிய மர்ம நபர் போனில் தொடர்பு கொண்டு நான் கேட்கும் பணத்தை தராவிட்டால் வலைத்தளத்தில் விடியோவை பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
அப்பெண் இந்த தகவலை கணவனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்து கணவன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் தெரியவந்தது பெரும்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த பிரகாஷ் (27) என்ற நபர் தான் வீடியோவை அனுப்பி மிரட்டியவர் என்று. பின்பு போலீசார் பிரகாஷை தேடி வந்த நிலையில், அவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்துக் கைதுச் செய்தனர். பின் அவரிடம் நடத்திய விசாரணையில் கணவன் மனைவி இருவரும் தனிமையில் இருந்ததை பெண் ஒருவர் வீடியோ எடுத்து கொடுத்ததாக கூறியுள்ளார். அப்பெண் யார் என்று விசாரணை நடந்து வருகிறது. பிரகாஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…