“மனைவி அதை பண்ணிடுவா” போலீஸ்க்கே சவால்… தன்னைத்தானே பிளேடால் கிழித்துக் கொண்ட கணவர்… நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!

Spread the love

சென்னையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47), டிரைவர். இவரின் 2 ஆவது மனைவி பாத்திமா (45). இவர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி, ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

பாத்திமா கொடுத்த புகாரில், “எனது 2 ஆவது கணவர் (கோபாலகிருஷ்ணன்) என் மீது சந்தேகப்பட்டு, சித்திரவதை செய்கிறார். கடைக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்த பொழுது, நடுரோட்டில் என்னை சரமாரியாக தாக்கினார்”. எனவே கோபாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கும் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரில், “என் மனைவி மீது சந்தேகம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும் போலீசார் விசாரிக்கையில், மது போதையில் இருந்த கோபாலகிருஷ்ணன், திடீரென கீழே விழுந்து உருண்டு, பிரண்டு நெஞ்சு வலிப்பதாக நாடகமாடியுள்ளார். உடனே தம்பதியை, ஒரு ஆட்டோவில் அனுப்பிவைத்தனர். ஆட்டோவில் ஏறிய கோபாலகிருஷ்ணன், போலீசாரை பார்த்து “என் மீது எப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்க்கிறேன் ? உங்களை என்ன செய்யப் போகிறேன் என்று பாருங்கள்” என்று திமிராக பேசிவிட்டு வேகமாக ஆட்டோவில் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு, போலீசார் தன்னை தாக்கியதாக உடல் முழுவதும் ரத்த காயங்களுடன், கோபாலகிருஷ்ணன் கதறி அழுவது போல் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதை பார்த்த போலீசார், பாத்திமாவுக்கு போன் செய்து விசாரிக்கையில், “கோபாலகிருஷ்ணனே பிளேடால் தன்னை அறுத்துக் கொண்டு, போலீஸ் மீது பழி போடுகிறார்” என்று தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரிக்கையில், “தன் மீது மனைவி புகார் கொடுத்தால், தான் கைது செய்யப்படுவோம்” என்ற பயத்தில், தனக்கு தானே பிளேடால் அறுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய கோபாலகிருஷ்ணன், ஜே.ஜே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று, “என்னை மன்னித்து விடுங்கள்”. போலீசாரை பழிவாங்கும் நோக்கத்தில் தன்னைத்தானே பிளேடால் கிழித்து கொண்டதாக தெரிவித்து அழுதார். ஜே.ஜே.நகர் இன்ஸ்பெக்டர், கோபாலகிருஷ்ணனை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளார்.

மேலும் போலீசார் விசாரணையில், நாகர்கோவிலை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. தான் தங்கியிருந்த அடுக்குமாடு குடியிருப்பில், சமையல் வேலைக்காக வந்த பாத்திமாவுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை 2 ஆவது திருமணம் செய்து, 12 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளார். தற்பொழுது அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால், பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Srimathi

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

7 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

8 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

8 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

8 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

8 மணத்தியாலங்கள் ago