நீயெல்லாம் ஒரு மனுஷனா.. அந்த விஷயத்துக்காக பஞ்சாயத்து தலைவரோட சேர்ந்து மனைவிக்கு மொட்டை அடித்த கணவன்.. அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் கடகோலா கிராமம் உள்ளது. அங்கு வசித்து வருபவர் பசவப்பா, மனைவி ஸ்ரீதேவி (22).  பசப்பாவுக்கு குடிப்பழக்கம் உள்ளது, இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். சண்டையின் காரணமாக ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவியின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவருடன் சேர்ந்து வாழச் சொல்லி உள்ளனர். ஸ்ரீதேவி வீட்டிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார் இருப்பினும் பசவப்பா மீண்டும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வழக்கம்போல் நேற்று முன்தினம் வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்ததால் பசவப்பாவுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மனைவி ஸ்ரீதேவி குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என்ற எவ்வளவோ கூறியும் அவர் கேட்கவில்லை. கோபத்தின் உச்சிக்குச் சென்ற பசவப்பா கிராம பஞ்சாயத்து தலைவர் சதாசிவ நியாமகவுடாவுடன் சேர்ந்து மணி ஸ்ரீதேவியை சரமாக அடித்து காயப்படுத்தி உள்ளனர். அடியை தாங்க முடியாமல் நிலைகுலைந்து மயங்கி விழுந்துள்ளார் ஸ்ரீதேவி. இவ்வளவு நடந்தும் கோபம் குறையாமல் ஸ்ரீதேவியின் முடியை வெட்டி மொட்டை அடித்து மீண்டும் இருவரும் சேர்ந்து ஸ்ரீதேவியை தாக்கியுள்ளனர். அக்கம்பக்கத்தில் உள்ளோர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Divyamayakannan

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

3 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

3 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

3 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

4 மணத்தியாலங்கள் ago