Categories: சினிமா

நான் எடுத்த க்ளைமேக்ஸை மாற்ற சொன்னார்கள்… அது என்னை insult செய்தது.. ஆனால்… இயக்குனர் விக்ரமன் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்!

Spread the love

1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.

அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

அதனால் கடைசியாக அவர் இயக்கிய படமாக மரியாதை படம் அமைந்தது. அந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. அதனால் இப்போது சினிமாவில் இருந்து விலகி இடைவெளி எடுத்துக் கொண்டு அவரது மகனைக் கதாநாயகனாக்கியுள்ளார்.

இந்நிலையில் விக்ரமன் தன்னுடைய முதல் படமான புது வசந்தம் படம் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் புதுவசந்தம் படமெடுத்து முடித்ததும் பின்னணி இசைப் பணிகள் நடைபெற்றன. அங்கிருந்த இசைக் கலைஞர்கள் யாருக்கும் அந்த க்ளைமேக்ஸ் பிடிக்கவில்லை. அது தயாரிப்பாளர் சௌத்ரி சார் காதுக்கு சென்றது. அவர் என்னை அழைத்து க்ளைமேக்ஸை மாற்றி எடு என்றார்.

அது என்னை அவமானப்படுத்துவது போல இருந்தது. ஆனாலும் நான் இன்னொரு க்ளைமேக்ஸ் காட்சி ஷூட் செய்தேன். தணிக்கைக்கு இரண்டு க்ளைமேக்ஸ்கள் கொண்ட படத்தையும் சென்சார் செய்தேன். அப்போது எல்லோரும் நான் எடுத்த க்ளைமேக்ஸ்தான் நன்றாக உள்ளது என சொன்னார்கள். அதன்பின்னர் அந்த க்ளைமேக்ஸுடன்தான் படம் ரிலீஸானது.” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

அய்யய்யோ…. என்ன கொடுமை இது … முட்டை சாதம் தீர்ந்துபோனதால் கொடூரம்… ஆட்டோவில் வந்து வாலிபர் மீது வாள் வீச்சு… நடுங்கவைக்கும் வீடியோ….!

பென்னருகட்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகிஹள்ளியில் முட்டை சாதம் தீர்ந்துவிட்டதாகக் கூறி எழுந்த தகராறு, வாள் வீச்சு தாக்குதலில் முடிந்துள்ளது.…

4 minutes ago

மதுபோதையில் பயங்கரம்….! பார்க்கிங் தகராறில் மீன் வியாபாரியை கொடூரமாக தாக்கிய நபர்…. மண்டை ஓடு உடைந்து பரிதாப பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை சௌகார்பேட்டையில் மீன் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த முருகன் (54), புளியந்தோப்பு சுந்தரபுரம் 2-வது தெருவில்…

17 minutes ago

“பக்கத்தில் இருந்தும் கண்டுபிடிக்க முடியலையே…” 51 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரை தேடி கண்டுபிடித்த மகள்…! கொடுமைகள் நிறைந்த வாழ்க்கை பயணம்…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் வொார்த் பகுதியில், கடந்த 1971-ஆம் ஆண்டு 22 மாதக் குழந்தையாக இருந்த மெலிசா…

24 minutes ago

“13,000 கோடியா?.. இல்ல இன்பச் சுற்றுலாவா?”…. லண்டனில் நடந்தது என்ன?… முதலமைச்சர் விஜய்யின் பயண ரகசியத்தை அம்பலப்படுத்திய திமுக……!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதலமைச்சர்…

28 minutes ago