சின்னத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷர்மிளா தாப்பா. இவர் நேபாளை பூர்வீகமாக கொண்டவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர்த்து அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த நடன கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர் சமீபத்தில் இந்திய குடியுரிமை வேண்டி வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது அவருடைய ஆவணங்களை சோதித்து அதிகாரிகள் ஷர்மிளாவிடம் ஏற்கனவே இந்திய பாஸ்போர்ட் இருப்பதை தெரிந்து கொண்டனர்.
இந்தியர் அல்லாத ஷர்மிளா எப்படி இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார் என்ற விசாரணையில் அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்த இந்த பாஸ்போர்ட் வாங்கி உள்ளது தெரியவந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இந்திய பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு ஷர்மிளா சென்னை அண்ணா நகரில் வாழ்ந்து வந்துள்ளார். இப்படியான நிலையில் நிரந்தர குடியுரிமை கேட்டு அவருடைய விண்ணப்பத்தில் தான் வியாசர்பாடியில் வசித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் ஷர்மிளா பெரம்பூரில் இருந்து வருவதாக அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. நேபாளத்தை சேர்ந்த ஷர்மிளா இந்திய பாஸ்போர்ட் வாங்குவதற்கு போலியான ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஷர்மிளா சட்டவிரோதமாக எவ்வாறு இருந்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஷர்மிளா மீது சென்னை குற்றப்பிரிவு காவல் துறையில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் சார்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸ் ஆர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் போலி பாஸ்போர்ட் எடுப்பதற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் யார் என்பதையும் விசாரணை செய்ய வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, தீவிர மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும்…
விக்கிரவாண்டியைத் தொடர்ந்து திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…