சென்னை சௌகார்பேட்டையில் மீன் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த திண்டிவனத்தைச் சேர்ந்த முருகன் (54), புளியந்தோப்பு சுந்தரபுரம் 2-வது தெருவில் தனது மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி மதியம் வேலை முடிந்து வந்த முருகன், தனது வண்டியைத் தெருவில் நிறுத்தியுள்ளார்.
அப்போது அதே பகுதியில் மீன் வண்டி ஓட்டும் ஜான்சன் (53) என்பவரும் தனது வண்டியை அங்கு நிறுத்த முயன்றபோது, மதுபோதையில் இருவருக்கும் இடையே கடுமையான பார்க்கிங் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜான்சன், முருகனைத் தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மறுநாள் காலை கடுமையான தலைவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகனுக்கு மண்டை ஓடு உடைந்திருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஏற்கனவே கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து ஜான்சனைக் கைது செய்திருந்த பேசின் பிரிட்ஜ் காவல்துறையினர், சிகிச்சை பலனின்றி முருகன் வியாழக்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கைக் கொலை வழக்காக மாற்றி ஜான்சனைச் சிறையில் அடைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…