“13,000 கோடியா?.. இல்ல இன்பச் சுற்றுலாவா?”…. லண்டனில் நடந்தது என்ன?… முதலமைச்சர் விஜய்யின் பயண ரகசியத்தை அம்பலப்படுத்திய திமுக……!

Spread the love

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கவும் முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் பயணத்தின் மூலம் சுமார் ரூ.13,000 கோடிக்குமேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சுற்றுப்பயணம் குறித்தும் ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் உண்மைத்தன்மை குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. முந்தைய திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களையும், தற்போது விஜய் மேற்கொண்ட பயணத்தையும் ஒப்பீடு செய்து திமுக தனது எக்ஸ் (X) பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டாலின் தனது பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் செய்தியாளர்களைச் சந்தித்துப் வெளிப்படையாக விவரித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக, விஜய்யின் பயணம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

ஏழு நாட்கள் கொண்ட இந்தப் பயணத்தில் ஒரு நாள் மட்டுமே முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெற்றதாகவும், மற்றொரு நாள் கார் பந்தயம் பார்க்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைக் குறிப்பிட்டுள்ள எதிர்த்தரப்பினர், “மீதமுள்ள நாட்களில் அரசுச் செலவில் இன்பச் சுற்றுலா சென்றாரா முதலமைச்சர்?” எனச் சரமாரியாகக் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசுமுறைப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த தெளிவான விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஒருநாள் சந்திப்பிலேயே ரூ.13,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சூழலில், இந்தப் பயணத்தின் உண்மையான பயன்கள் குறித்து பொதுமக்களிடையேயும் கேள்விகள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும், லண்டன் பயணத்தின் முழு விவரங்களை வெளியிடக் கோரும் கோரிக்கைகளுக்கும் தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து என்ன மாதிரியான விளக்கங்கள் அளிக்கப்படும் என்பதைத் தமிழக அரசியல் களம் உற்றுநோக்கி வருகிறது.

Nanthini

Recent Posts

4 மாத கர்ப்பிணி மனைவி கொலை வழக்கு…! “கணவரை கொடூரமாக குத்தி….” காரில் வந்தவர் வெறிச்செயல்… பழிக்கு பழியா…? நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…

35 minutes ago

இவன் என்ன விட்டுட்டு போக பாக்குறான் சார்… ஓடும் காரில் தொங்கிய பெண்… உ . பி – யில் நடந்த சம்பவம்… பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…

38 minutes ago

“அந்த VVIP யார்…?” ரிசார்ட்டில் மறுக்கப்பட்ட சிறப்பு சேவை…! இளம்பெண் படுகொலையில் விலகாத மர்மம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…

43 minutes ago

“டாக்டராக மாறிய டிரைவர்…” மருந்து சீட்டெல்லாம் எழுதி கொடுக்கிறாரே…! அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து…. இணையத்தை அதிர வைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…

50 minutes ago

அசந்து தூங்கிய போது பயங்கரம்…! “கணவரின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு…” முதல் மனைவி, பிள்ளைகள் சேர்ந்து செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…

56 minutes ago