“உங்க அப்பா சில ஹீரோக்களை வளர்த்துவிட்ட மாதிரி.. நான் இருப்பேன்”.. விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சர்ச்சையான விஷாலின் பேச்சு..

By Mahalakshmi

Updated on:

நடிகர் சங்கத்தின் சார்பாக மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் சங்க தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக “நடிகர் சங்கம் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி” நடைபெற்றது.  இதில் நிகழ்வில் கலந்துகொள்ள   திரை பிரபலங்கள்  படையெடுத்து வந்தனர். இந்த மேடையில் தற்போதைய நடிகர் சங்க தலைவர் நடிகர் விஷால் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

   

இந்த நிகழிச்சியில் பல நடிகர்கள் தனது ஆழ்ந்த இரங்கல்களையும் கேப்டன் விஜயகாந்த் தனக்கு செய்த நல்ல காரியங்களையும் சொல்லி மனமார நன்றி தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் அவரின் இறப்பை குறித்து இரங்கல்களையும் மனவருத்தத்துடன் தெரிவித்தார்கள். முன்னாள் நடிகர் சங்க தலைவராக  கேப்டன் விஜயகாந்த் இருந்தபோது பாகுபாடு இன்றி அனைவருக்கும் சரி சமமான உணவை அளித்தார். மேலும் திரைப்படத்துறையில் தற்போது இருக்கும் டாப் 10 நடிகர்களை உருவாக்க ஆரம்பத்தில் தூணாக இருந்து உயர்த்தியவர் கேப்டன் விஜயகாந்த்.

அது மட்டுமில்லாமல் அப்போதைய சூழலில் நல்ல மார்க்கெட் இருந்த கேப்டன் விஜயகாந்த் புது முகங்களுடன் நடித்து அவர்களையும் முன்னுக்கு வர செய்தார். அதில் குறிப்பாக  நடிகர் விஜய், சூர்யா மற்றும் பல இயக்குனர்களையும் திரைத்துறைக்கு  அறிமுகப்படுத்தினார். இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் கொண்ட நல்ல மனிதரான கேப்டன் விஜயகாந்த் மகனுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்பதை மனவருத்தத்துடன் கூறினார். மேலும் நடிகை சண்முக பாண்டியனை கேப்டன் விஜயகாந்த் வளர்த்துவிட்ட நடிகர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் சுட்டி காட்டினார்.

இதில் குறிப்பாக விஷால் பேசிய வார்த்தையில் விஜயை  குறிப்பது போல இருந்தது என பலரும் தெரிவித்த நிலையில் சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும் விஷால்  உங்கள் விட்டு பிள்ளைபோல் நினைத்து; உனக்கு விருப்பம் இருந்தால் நான் உன்னோடு நடிக்க விரும்புகிறேன் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று கூறினார். இனி  கேப்டன் விஜயகாந்த் வழியில் தான்  நடப்பேன் என்றும் கூறினார் நடிகர் விஷால்.

author avatar
Mahalakshmi