இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர் கிங்காங்-இன் மகள் எடுத்திருக்கும் மதிப்பெண் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் கிங்காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவருடைய உண்மையான பெயர் சங்கர்.
ஆனால் இவரது பெயர் பாதி பேருக்கு தெரியாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அதிசய பிறவி என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி இருக்கின்றார். இதுவரை ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே பாராட்டை பெற்றிருக்கின்றார். இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேல் உடன் இணைந்து பல காட்சிகளில் நடித்திருக்கின்றார். நடிகர் கிங்காங் 1990 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்த கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கின்றார்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வாங்கி இருந்தார். தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்கு தேசிய விருதும் வழங்கியிருந்தனர். இது ஒரு புறம் இருக்க இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கிங்காங் தனது மகனுடன் கலந்து கொண்டிருந்தார். இவருக்கு இரண்டு பெண்கள் உள்ள நிலையில் அதில் மூத்த பெண் தற்போது பிளஸ் டூ தேர்வில் 404 மார்க்கு வாங்கி பாஸ்-ஆகி இருக்கின்றார். இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் அவர் நல்ல மார்க் வாங்கியதை நினைத்து பெருமகிழ்ச்சி அடைந்து இருக்கின்றார் காமெடி நடிகர் கிங்காங்.