அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

By Mahalakshmi on மே 6, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்து வருகிறார்கள். சிறந்த படைப்புகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ரீ ரிலீஸ் கலாச்சாரம் அமைந்திருக்கின்றது. நடிகர்களை நேசிக்கும் வெறித்தனமான ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களின் படங்கள் மறுபடியும் எப்போது வெளியாகும் அதனை கொண்டாடுவது என்று இருந்து வருகிறார்கள்.

   

அதே போல் ரீ ரிலீஸ் செய்யும் படங்களையும் கொண்டாடி வருகிறார்கள். இதனை நாம் கில்லி படத்தின் மூலமாக பார்த்திருப்போம். கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி விஜய் திரிஷா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. இந்த திரைப்படம் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. 50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

   

 

விஜயின் கெரியரில் இந்த திரைப்படம் முக்கிய மை கல்லாக அமைந்தது. இந்த படத்தைக் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து பல நடிகர்களின் திரைப்படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. கில்லி திரைப்படத்தை தொடர்ந்து மே ஒன்றாம் தேதி அஜித்தின் பில்லா திரைப்படமும் 150 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.

ஆனால் இந்த திரைப்படம் விஜய்யின் கில்லி திரைப்படம் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை என்று தான் கூற வேண்டும். கில்லி திரைப்படம் கமலா தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் கூட இந்த திரையரங்கின் உரிமையாளர் விஜயை சந்தித்து புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தார். மேலும் கில்லி திரைப்படத்தை கமலா திரையரங்கில் 100 நாட்கள் ஓட்ட அவர் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது .

இதை தொடர்ந்து சூர்யா, தனுஷ் திரைப்படங்களும் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற தேவதையை கண்டேன் திரைப்படம் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கஜினி திரைப்படம் ரீலீஸ் செய்யப்பட உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது. இப்படி டாப் நடிகர்களின் படங்கள் போட்டி போட்டுக் கொண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.