வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை லட்சக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு சீரியல் நடிகர்களுக்கும் ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்த புகழ் பெற்றவர் நடிகர் அருண் பிரசாத்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் மற்றும் ரோஷினி நடித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிவடைந்தது. இவரும் விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அர்ச்சனாவும் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாக கூறி வந்தார்கள்.
ஆனால் அதனை இருவரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அர்ச்சனா மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆகி டைட்டில் வென்றிருக்கின்றார். தற்போது இவர் எங்கு சென்றாலும் மக்கள் இவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் காதலிக்கவில்லை என்று கூறிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு தனித்தனியாக ட்ரிப் போய் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்கள். இதற்கிடையில் தற்போது அருண் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கின்றார். அதனை வீடியோவாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதை பார்த்த அர்ச்சனா என் ஹீரோவை ஷூட் செய்ததற்கு நன்றி என கமெண்ட் செய்திருக்கின்றார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் காதலிப்பது உண்மைதான் என்று கூறி வருகிறார்கள். ஆனால் இருவரும் சேர்ந்து மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடிக்கிறார்கள் என்பதை மறைமுகமாக அர்ச்சனா இப்படி கமெண்ட் செய்திருப்பதாக பலரும் தெரிவித்து வருகிறார்கள். இது உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.