தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ‘நா சாமி ரங்கா’, ராமின் ‘ ஹைப்பர்’, ராணா டகுபதியின் ‘நேனே ராஜு நேனே மந்திரி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
பின்னர் ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ உள்ளிட்ட 2 சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். பின்னர் 2019 ஆம் ஆண்டு காஞ்சனா 3 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருந்தார்.
இந்த சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரியங்கா நல்காரி தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார். ரோஜா சீரியலுக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சீதாராம் சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இவரது நீண்ட நாள் காதலர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டு சீரியலில் இருந்து விலகி விட்டார்.
மலேசியாவில் தனது கணவருடன் வசித்து வந்த பிரியங்கா மீண்டும் சீரியலில் ரீஎன்றி கொடுத்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நளதமயங்கி என்ற சீரியலில் ஹோட்டல் தொழில் செய்பவராக தற்போது நடித்து வருகிறார். இவர் தற்போது நிஜ வாழ்க்கையில் தனது கணவருடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கின்றார். புதிய ஹோட்டலின் பூஜை தொடர்பான வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ஹோட்டலின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறியிருக்கிறார்.