#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் விஜய். புகழின் உச்சியில் இருக்கும்போது சினிமா வேண்டாம் என்று உதறி தள்ளி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று விரும்பி கட்சி ஒன்றை ஆரம்பிக்க போவதாக அறிவித்தார். அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சியை அறிமுகம் செய்து கட்சியின் கொடியையும் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்சி மாநாட்டில் ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்ட முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் விஜய்யின் பேச்சை கேட்க அங்கு கூடியிருக்கிறார்கள்.
விக்கிரவாண்டி சாலையும் அதற்கு அடுத்ததாக 20 கிலோமீட்டர் தொலைவு மேல் ஸ்தம்பித்து போய் இருக்கிறது. அவ்வளவு பெருங்கூட்டம் இதுவரை அரசியலில் சமீப காலங்களில் காணாத ஒரு பெருங்கோட்டம் விஜயை காண படையெடுத்து வந்திருக்கிறது. கட்சி கொடியை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் தளபதி விஜய்.
கட்சியின் கொள்கைகளும் தீர்மானங்களும் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக நடிகர் விஜய் தற்போது பேச ஆரம்பித்திருக்கிறார். பேச ஆரம்பிக்கும்போதே தங்களது கட்சியின் கொள்கை தலைவர்களை பற்றி பேசி இருக்கிறார். அதில் முதலாவதாக அவர் பேசியது பெரியார் தான்.
பெரியாரைப் பற்றி பேசும் பொழுது விஜய் பெரியார் அவர்கள் நமது கட்சியின் கொள்கை தலைவர் தான். ஆனால் அவர் கடவுள் இல்லை என்ற கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லை. கடவுள் நம்பிக்கை ஒவ்வொருத்தரும் தனிப்பட்ட விஷயம். அதை நாம் எடுக்கப் போவதில்லை. அவரது மற்ற கொள்கைகளான பெண் கல்வி பெண் முன்னேற்றம் ஆகியவற்றை முதலாவதாக எடுத்து அந்தக் கொள்கையை பின்பற்றுவோம் என்று நடிகர் விஜய் பேசியிருக்கிறார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…