த வெ க கட்சி கொடியில் யானை மற்றும் வாகை மலர் வச்சதுக்கு காரணம் இதுதான்… மாநாட்டில் அவரே சொன்ன விளக்கம்…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்திருந்த விஜய் கிட்டத்தட்ட கோடி கணக்கில் சம்பளம் பெறும் நடிகராவார். புகழின் உச்சத்தில் இருந்தும் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இவருக்காக காத்திருந்தும் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து புதிதாக கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்திருந்தார் நடிகர் விஜய்.

அதன்படி தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் எனவும் கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார் விஜய். இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த இடத்தில் கூடி இருப்பதாக காவல்துறை கூறினர்.

விக்கிரவாண்டி சாலை முழுவதும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்களால் சூழப்பட்டு அந்த இடமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. தற்போது விஜய் தனது கட்சியின் நோக்கத்தையும் எதற்காக செயல்பட போகிறார்கள் என்பதை பற்றியும் விளக்கமாக பேசி முடித்திருக்கிறார். விஜய் பேசி முடித்த பிறகு தற்போது த வெ கட்சி கொடியின் விளக்கத்தையும் அவரே காணொளி மூலம் பேசி பகிர்ந்திருக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் மேலேயும் கீழேயும் சிவப்பு வண்ணம், இருக்கிறது. இந்த சிவப்பு வண்ணம் பொறுப்புணர்வையும், புரட்சியை தூண்டக்கூடியதா இருக்கிறது. நடுவில் இருக்கும் மஞ்சள் நிறம் இலட்சியம் மகிழ்ச்சியை நம்பிக்கை போன்றவற்றிற்கு அர்த்தமாக மஞ்சள் நிறம் வைக்கப்பட்டிருக்கிறது.

கட்சி கொடியின் நடுவில் இருக்கும் வாகை மலர் வெற்றிக்கு மன்னர்கள் காலத்தில் போருக்கு சென்று வெற்றி பெற்ற பின்னர் வாகை மலர் சூடி வருவார்களாம். ஆனால் முத்தரையர் பெரும்பிடுகு மன்னர் போருக்கு செல்வதற்கு முன்பே வெற்றியை முன்னமே கணித்து வாகைமலர் போட்டு செல்வாராம். அதேபோலத்தான் நாம் வெற்றியை முன்னமே கணித்து வாகை மலரை கொடியில் வைத்திருக்கிறோம் என்று கூறினார் விஜய். மேலும் கட்சி கொடியின் நடுவில் இரட்டை யானைகளுக்கு நடுவே வாகை மலர் அமைந்திருக்கிறது. இந்த இரட்டை யானை போரில் வீரர்களுக்கு இணையாக பிளிறி கொண்டு முன்னங்கால்களை தூக்கி எதிரிகளை ஓடவிடுமாம். கும்கி யானைகளுக்கு இணையானது இந்த இரட்டை யானைகள் எனவும் பலத்திற்காகவும் பயமில்லாமல் போராடும் தன்மைக்காகவும் இந்த யானைகள் வைக்கப்பட்டு இருப்பதாக கொடியின் விளக்கத்தை விஜய் அவர்களே காணொளி மூலம் தொண்டர்களுக்கு பகிர்ந்து இருக்கிறார்.

admin

Recent Posts

“ஏய்.. என்னப்பா இது…!” மரண வெள்ளத்தில் மாஸ் காட்டிய காட்டு ஆடு… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!

இயற்கை சீற்றங்களின் போது மனிதர்கள் மட்டுமின்றி, விலங்குகளும் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடும் காட்சிகள் நெஞ்சை நெகிழ வைப்பவை. சமீபத்தில்…

5 minutes ago

அனிதா ராதாகிருஷ்ணன் ரவுடியா… அப்போ நீங்க யாரு… தவெகவை கிழித்து தொங்கவிட்ட திமுக பரந்தாமன்…!

அவதூறு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழக அரசால்…

5 minutes ago

அந்தப் பொறுப்பை என்கிட்ட கொடுங்க… விஜயிடம் ரகசிய டீல் பேசிய விஜயபாஸ்கர்… பின்னணியில் இருக்கும் 118 மேஜிக் கணக்கு… அடுத்த ட்விஸ்ட்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்திருப்பது பார்க்கப்படுகிறது. அவர் மீதான பல்வேறு…

15 minutes ago

“யார் சாமி நீ… தன் மனைவிக்காக.. 20 நாளில் ‘சொந்தமாக’ எஸ்கலேட்டர் செய்த படிக்காத மேதை…! தாஜ்மகாலை மிஞ்சிய ஒரு விவசாயியின் காதல் கதை..!”

வெறும் படிப்பால் மட்டும் வாழ்க்கையில் சாதித்து விட முடியாது என்பதற்கு நம் நாட்டில் வாழ்ந்த, வாழ்கின்ற பல படிக்காத மேதைகளே…

21 minutes ago

கணவன் தூங்கும் போது கள்ளக்காதலனுடன் வந்த மனைவி… நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்… 4-வது கல்யாணத்திற்காக போட்ட பயங்கர பிளான்…!

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்கப்பூர் மாவட்டம், ஹனுமான் வார்டு பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய சரோஜ் மெஹ்ரா. இவருக்கு ஏற்கனவே…

25 minutes ago

ரூ35 கோடி Vs ரூ50 கோடி..! தவெக, திமுக MLA-க்களுக்கு வலைவீச்சு…? தமிழக அரசியலை அதிரவைக்கும் பவர் பிளே…!

தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது வெடித்துள்ள குதிரை பேரப் புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற…

30 minutes ago