தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்திருந்த விஜய் கிட்டத்தட்ட கோடி கணக்கில் சம்பளம் பெறும் நடிகராவார். புகழின் உச்சத்தில் இருந்தும் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இவருக்காக காத்திருந்தும் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்து புதிதாக கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அறிவித்திருந்தார் நடிகர் விஜய்.

அதன்படி தனது கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் எனவும் கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகம் செய்தார் விஜய். இன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த இடத்தில் கூடி இருப்பதாக காவல்துறை கூறினர்.
விக்கிரவாண்டி சாலை முழுவதும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்களால் சூழப்பட்டு அந்த இடமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. தற்போது விஜய் தனது கட்சியின் நோக்கத்தையும் எதற்காக செயல்பட போகிறார்கள் என்பதை பற்றியும் விளக்கமாக பேசி முடித்திருக்கிறார். விஜய் பேசி முடித்த பிறகு தற்போது த வெ க கட்சி கொடியின் விளக்கத்தையும் அவரே காணொளி மூலம் பேசி பகிர்ந்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் மேலேயும் கீழேயும் சிவப்பு வண்ணம், இருக்கிறது. இந்த சிவப்பு வண்ணம் பொறுப்புணர்வையும், புரட்சியை தூண்டக்கூடியதாக இருக்கிறது. நடுவில் இருக்கும் மஞ்சள் நிறம் இலட்சியம் மகிழ்ச்சியை நம்பிக்கை போன்றவற்றிற்கு அர்த்தமாக மஞ்சள் நிறம் வைக்கப்பட்டிருக்கிறது.

கட்சி கொடியின் நடுவில் இருக்கும் வாகை மலர் வெற்றிக்கு மன்னர்கள் காலத்தில் போருக்கு சென்று வெற்றி பெற்ற பின்னர் வாகை மலர் சூடி வருவார்களாம். ஆனால் முத்தரையர் பெரும்பிடுகு மன்னர் போருக்கு செல்வதற்கு முன்பே வெற்றியை முன்னமே கணித்து வாகைமலர் போட்டு செல்வாராம். அதேபோலத்தான் நாம் வெற்றியை முன்னமே கணித்து வாகை மலரை கொடியில் வைத்திருக்கிறோம் என்று கூறினார் விஜய். மேலும் கட்சி கொடியின் நடுவில் இரட்டை யானைகளுக்கு நடுவே வாகை மலர் அமைந்திருக்கிறது. இந்த இரட்டை யானை போரில் வீரர்களுக்கு இணையாக பிளிறி கொண்டு முன்னங்கால்களை தூக்கி எதிரிகளை ஓடவிடுமாம். கும்கி யானைகளுக்கு இணையானது இந்த இரட்டை யானைகள் எனவும் பலத்திற்காகவும் பயமில்லாமல் போராடும் தன்மைக்காகவும் இந்த யானைகள் வைக்கப்பட்டு இருப்பதாக கொடியின் விளக்கத்தை விஜய் அவர்களே காணொளி மூலம் தொண்டர்களுக்கு பகிர்ந்து இருக்கிறார்.
