Connect with us

HISTORY

வண்டலூர் உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டது வண்டலூரில் கிடையாது! முதன்முதலில் உயிரியல் பூங்கா அமைந்தது சென்னையின் இந்த பகுதியில்தான்….

சென்னை மாநகரில் மிக முக்கிய இடங்கள் பல இருந்தாலும் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கென்று மக்களின் மனதில் ஒரு தனி இடம் உண்டு. ஆனால் இந்த உயிரியல் பூங்கா தொடக்க காலகட்டத்தில் வண்டலூரில் தொடங்கப்படவே இல்லை. அது வண்டலூருக்கு இடமாற்றப்பட்டது என்பதே உண்மை.

1854 ஆம் ஆண்டு முதன்முதலில் எக்மோர் பகுதியில் அமைந்திருந்த அருங்காட்சியகத்தில்தான் இந்த உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டது. அப்போது ஒரு சிறுத்தையும் ஒரு புலியும் மட்டுமே இருந்தது. அதன் பின் சென்னை மத்திய அருங்காட்சியகத்தின் இயக்குனரான எட்வர்ட் கிரீன், அப்போதிருந்த கர்நாடக பகுதியின் நவாப்பிடம் இருந்து பல விலங்குகளை சேகரித்தார்.

   

அதன் பின் பாலூட்டிகள், பறவைகள் உட்பட 300க்கும் அதிகமான விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து 1861 ஆம் ஆண்டு சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மக்கள் பூங்காவிற்கு இந்த உயிரியல் பூங்கா மாற்றலானது.

அதனை தொடர்ந்து பல வருடங்கள் மக்கள் பூங்காவில் உயிரியல் பூங்கா இயங்கி வந்த நிலையில் சுதந்திரம் கிடைத்தப் பிறகு மெட்ராஸ் மாநகரம் விரிவடையத்தொடங்கியது. வாகனங்கள் அதிகரித்ததால் காற்று மாசு அதிகரித்து விலங்குகளின் நலனுக்கு கேடு விளையத் தொடங்கியது. மேலும் பூங்காவிற்கு போதுமான இடவசதியும் கிடைக்கவில்லை.

ஆதலால் 1976 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை, நகர் பகுதிக்கு கொஞ்சம் வெளியே இருந்த வண்டலூர் வனப்பகுதியில் 1265 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. 1979 ஆம் ஆண்டு உயிரியல் பூங்காவிற்கான பணிகள் தொடங்கப்பட்டு உயிரினங்கள் அனைத்தும் இடமாற்றப்பட்டன. அதன் பின் 1985 ஆம் ஆண்டு மக்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்தவிடப்பட்டது. இவ்வாறு முதலில் எக்மோர் பகுதியில் தொடங்கப்பட்ட உயிரியல் பூங்கா அதன்பின் வண்டலூர் பகுதிக்கு மாற்றப்பட்டு தற்போது இயங்கி வருகிறது.

author avatar
Continue Reading

More in HISTORY

To Top