திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவரை திருவாரூர் நகர போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (24), தவெக கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பு படித்து வரும் நிலையில், நேற்று இரவு தனது நண்பரான அசோக் என்பவருடன் திருவாரூர் பேருந்து நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு 27 வயதுடைய இளம் பெண் ஒருவர், தனது தந்தையின் வருகைக்காகத் தனியாகக் காத்துக் கொண்டிருந்தார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆனந்தராஜும் அசோக்கும், அந்தப் பெண்ணிடம் வம்பு இழுத்து, ஈவ்டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தகாத வார்த்தைகளால் பேசி, அவருக்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த அந்தப் பெண், அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றபோதிலும், இருவரும் அவரை விடாமல் தொடர்ந்து பின்தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
சற்று நேரத்தில் அங்கு வந்த பெண்ணின் தந்தை, நிலைமையை உணர்ந்து குற்றவாளிகளுடன் தைரியமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு, ஆனந்தராஜின் இருசக்கர வாகனச் சாவியைப் பறிமுதல் செய்துவிட்டு, தனது மகளை அழைத்துக் கொண்டு உடனடியாகத் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், பெண்களைக் கேலி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தவெக பிரமுகர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக்கை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், பொறுப்பான அரசியல் கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களிடையே, குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…
தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…
தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…