சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய் மற்றும் அவரது 7 வயது மகள் ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனைக்கு வந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது. இதில் தாயின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு உடனடியாகத் தையல் போடப்பட்டு அதே மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கிப் படுகாயமடைந்த அவரது 7 வயது சிறுமி, தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
இந்தக் கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும், மருத்துவமனை உயர் அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதியே இடிந்து விழுந்திருப்பது நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் என்ன, கட்டிடப் பராமரிப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்ததா என்பது குறித்துப் பொதுப்பணித்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…
தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் "சித்தப்பு" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி…
1981 ஆம் ஆண்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் லாஸே குஸ்டாவ்சன் கோதன்பர்க்கில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில்…
கிரேட்டர்வின் தாத்ரி பகுதியில் உள்ள ஈஸ்டர்ன் பெரிஃபரல் எக்ஸ்பிரஸ்வேயில் பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்புவதற்காக, அதிக பாரம்…