ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் இருந்து உதயப்பூருக்கு சுற்றுலா வந்த சுனில், அல்பேஷ், ரித்விக் மற்றும் சுமித் ஆகிய நான்கு நண்பர்களில், இரண்டு பேர் தீன்தயாள் பூங்காவில் இருந்து மாணிக்யலால் வர்மா பூங்காவிற்கு ஜிப் லைன் மூலம் செல்லும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. பொதுவாக 45 வினாடிகளில் கடக்கக்கூடிய இந்த 630 மீட்டர் தூரப் பயணத்தின் நடுவே, திடீரென வீசிய பலத்த காற்றினால் ஜிப் லைன் பாதியிலேயே நின்று பயங்கரமாக ஆடத் தொடங்கியது.
திடீரென காற்றில் தொங்கியபடி சிக்கிக்கொண்ட அந்த இரு நண்பர்களும் பயத்தில் அலறி, உதவி கேட்டு சத்தமிட்டனர். இந்த திகிலூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வேகமாக வைரலானது. இதைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். வீடியோ வைரலானதை அடுத்து, இந்த விபத்து குறித்து உள்ளூர் நிர்வாகமும் உடனடியாக விசாரணையில் இறங்கியது.
சம்பவம் நடந்த உடனே அங்கு தயாராக இருந்த மீட்புக் குழுவினர் மிகவும் துரிதமாகச் செயல்பட்டனர். வெறும் இரண்டரை முதல் மூன்று நிமிடங்களுக்குள் அந்தரத்தில் தவித்த இருவரையும் பத்திரமாக மீட்டு, மீண்டும் தீன்தயாள் பூங்கா பகுதிக்குக் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், அவர்கள் இருவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஜிப் லைன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். உதயப்பூரில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் முன்னாள் மனைவி ஆர்த்தி தனது…
வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.…
ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர்…
சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ…
உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…