தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, தற்போதைய உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், தற்போது அமைந்துள்ள புதிய அரசு, இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தின் பெயரை ‘திறன் தமிழ்நாடு கார்ப்பரேஷன்’ என மாற்றியதோடு, மே 15-ஆம் தேதிக்கு முந்தைய அனைத்துப் பதிவுகளையும் நீக்கியுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘நான் முதல்வன்’ என்பது மு.க.ஸ்டாலின் பெயரிலோ அல்லது கலைஞர் பெயரிலோ அமைக்கப்பட்ட திட்டம் கிடையாது என்று கூறியுள்ளார். ஆயினும், ‘நான் முதல்வன்’ என்று சொன்னாலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற பெயர்தான் மக்களுக்கு நினைவுக்கு வரும் என்ற குறுகிய எண்ணத்தோடு புதிய அரசு இத்திட்டத்தின் பெயரை மாற்றி, அதன் சாதனைப் பதிவுகளையும் நீக்கியுள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் புதிய அரசின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசிய அவர், தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து வீர வசனம் பேசிய இன்றைய முதலமைச்சரின் நிலை, திரைப்பட பாணியில் “கண்ணாடியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருப்பது” போலத்தான் இருக்கிறது என்று சாடினார். அத்துடன், பேரிடர் காலங்களில் உணவு மற்றும் எரிபொருட்களை மக்கள் அவசரமாக வாங்குவதைப் போல, ஆட்சி அமைந்த நாள் முதலே அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து முதலமைச்சர் ‘பானிக் பையிங்’ செய்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் எள்ளி நகையாடியுள்ளார்.
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…
தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் "சித்தப்பு" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி…
1981 ஆம் ஆண்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் லாஸே குஸ்டாவ்சன் கோதன்பர்க்கில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில்…