“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

Spread the love

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த பணிப்பெண்ணை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்மணி 45 வயதான மீனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் ரத்த வெள்ளத்தில் மொட்டை மாடியில் கிடப்பதாகக் காவல்துறைக்குக் காலை 11:36 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.

இக்கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக 50 வயதான மருத்துவர் மணீஷ் குப்தா என்பவரைப் போலீசார் சம்பவ இடத்திலேயே பிடித்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், முதலில் அவர் அந்தப் பெண்ணைப் பேட்டால் தாக்கியதாகவும், பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதோடு, தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாகத் தனது வீட்டில் நம்பிக்கையுடன் வேலை செய்து வந்த பணிப்பெண்ணை, அந்த மருத்துவர் ஏன் இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்தார் என்பதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்து அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

12 minutes ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

44 minutes ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

44 minutes ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

45 minutes ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

58 minutes ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

1 மணத்தியாலம் ago