தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கடுமையாக விமர்சித்த தவெக-வின் ஆட்சியில், தற்போது தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைக் கண்டித்து தவெக அரசுக்கு எதிராக, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பாஜகவினர் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியை விட்டு விலகிச் சென்றவர்கள் குறித்து முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். “பாஜக தொண்டர்கள் எதற்கும் ஆசைப்படுபவர்கள் அல்ல; கட்சியை விட்டு யார் வெளியேறினாலும் இந்த இயக்கத்தை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. உத்தரப் பிரதேசத்தில் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த கல்யாண் சிங் கட்சியிலிருந்து வெளியேறியபோதும் பாஜகவிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதமர் மோடியின் தலைமையில் வலிமையாக இருக்கும் இந்த இயக்கத்திலிருந்து சென்றவர்கள், தற்போது மீண்டும் திரும்புவதற்கு யோசித்து வருவதாகத் தெரிவித்தார். மேலும், கட்சியை விட்டுப் போனவர்கள் யார் மீண்டும் வந்தாலும் தாயுள்ளத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்குரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சமீபத்தில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி, ‘வி தி லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். இதில் அவரது ஆதரவாளர்கள் பலரும் பாஜகவிலிருந்து விலகி சாரை சாரையாக இணைந்து வருவது தமிழக பாஜக தலைமையினரிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான், தவெக அரசுக்கு எதிரான போராட்டத்தில் நயினார் நாகேந்திரன் இத்தகைய கருத்துக்களைப் பேசியுள்ளார். இதனிடையே, தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நயினார் நாகேந்திரன் விரைவில் மாற்றப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…