புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த பரிதாபச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்குடி அருகிலுள்ள அரையபட்டி கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான லோகநாதன் என்பவர் சென்ட்ரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி சத்யாவிற்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 56 நாட்களுக்கு முன்புதான் இவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், தனது குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைப்பதற்காக, லோகநாதன் வீட்டில் இருந்த டேபிள் ஃபேனின் பிளக்கை சாக்கெட்டில் சொருகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மிகக் கடுமையான மின்சாரம் பாய்ந்ததில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவல் அறிந்த ஆலங்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து சில நாட்களே ஆன தன் குழந்தைக்குக் காற்றுக்காக மின்விசிறி போடச் சென்ற தந்தை பலியான சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…
அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…
மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…
தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் "சித்தப்பு" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி…
1981 ஆம் ஆண்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் லாஸே குஸ்டாவ்சன் கோதன்பர்க்கில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில்…