தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நடப்பு ஆண்டின் ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 வரையிலான அடுத்த 6 மாத காலத்திற்கு, சென்னை மாநகரைச் சேர்ந்த முதியவர்கள் பயன்படுத்துவதற்காக, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகள் வழங்கும் பணிக்கான தேதியை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்த இலவச பயண டோக்கன்கள் விநியோகம் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் பணிகள், வரும் ஜூன் 21, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை சென்னை முழுவதும் உள்ள 39 குறிப்பிட்ட மையங்களில் நடைபெற உள்ளன. இந்த மையங்களில் எவ்வித விடுமுறையுமின்றி அனைத்து நாட்களிலும் காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை டோக்கன்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்காலகட்டத்தில் வாங்கத் தவறுபவர்கள், ஆகஸ்ட் 1, 2026 முதல் டிசம்பர் 20, 2026 வரை வழக்கம்போல அந்தந்த பணிமனை அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் மற்றும் வேலை நேரங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய புதிய அடையாள அட்டை மற்றும் கட்டணமில்லா பயண டோக்கன்களைப் பெறுவதற்குத் தங்களின் இருப்பிடச் சான்றாகக் குடும்ப அட்டை, வயதுச் சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது கல்விச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த டோக்கன்களை அடையாறு, திருவான்மியூர், மந்தவெளி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட 25 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மையங்களில் முதியவர்கள் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம், தவெக தலைமையிலான கூட்டணியில் வெடித்துள்ள…
சென்னை மாவட்டம் போரூர் பகுதியில் 23 வயதான இளைஞர் சிவ சூர்யா, தனது தந்தை கௌதமனுடன் சேர்ந்து ஆர்வத்துடன் பேட்மிண்டன்…
தமிழகத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கிராமப்புற எல்லைக்குட்பட்ட நரேனா போலிஸ் சரகத்தில் உள்ள பிங்குன் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர்,…
தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6ஆம் தேதி…
1980களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா இடையே தற்போது வெடித்துள்ள நிதி…