“சத்தம் பத்தாது விசில் போடு”… TVK செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜயின் காதை மூட வைத்த விசில்… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று உற்சாகமாகத் தொடங்கியது. தேர்தல் ஆணையம் சமீபத்தில் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து, மிகுந்த உற்சாகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தின் தொடக்கமாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டதோடு, கட்சியின் கொள்கைப் பாடல் இசைக்கப்பட்டு நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று விஜய்யுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர். மேடையில் விஜய் ஏறியதும் அங்கிருந்த நிர்வாகிகள் அனைவரும் விசில் ஊத தொடங்கினர். அந்த சத்தத்தில் விஜய் தனது காதுகளை மூடிக்கொண்டார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, கட்சியின் அடிமட்ட அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சார யுக்திகள் குறித்து விஜய் தனது நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் எதிர்காலத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் இக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“மேடம் அவரு நடிக்கிறாரு மேடம்!… 5 வருடத்தில் காணாமல் போய்விடுவார்”.. முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த பாஜக செய்தி தொடர்பாளர்… எகிறும் அரசியல் அனல்…!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக கூட்டணிக் கட்சிகளின்…

9 minutes ago

ரஜினி பட ஷூட்டிங்கில் நேர்ந்த விபரீதம்.. 28 வயது இளைஞர் துடிதுடிக்க பலி… பெரும் சோக சம்பவம்…!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்து திரையுலகினரிடையே…

18 minutes ago

“15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!”… சோஃபாவில் கணவன் கண்ட அந்த காட்சி… புளோரிடாவில் நடந்த பகீர் சம்பவம்..!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான செவிலியர் அலெக்சிஸ் வான் யேட்ஸ், தனது 15 வயது வளர்ப்பு…

34 minutes ago

“1230 கோடி செலவு… காலி கஜானா”… எப்படிச் சாத்தியம்?… முதல்வரின் அறிவிப்பைச் சல்லடை போட்டுத் துளைக்கும் திமுக…!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி (DA) உயர்வை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது, மாநில அரசியலில்…

44 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. தமிழக அரசின் மகிழ்ச்சி செய்தி…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ₹1,000…

47 minutes ago

ECR-ல் இறால் பிடிக்கச் சென்றபோது நடந்த விபரீதம்!… சிறுவனின் உயிரைக் குடித்த சேறு… கதறி துடிக்கும் பெற்றோர்… சென்னையில் சோக சம்பவம்…!!!

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் - செல்லமீனா தம்பதியின் மகன் பிரகலாதன் (13).…

48 minutes ago