ECR-ல் இறால் பிடிக்கச் சென்றபோது நடந்த விபரீதம்!… சிறுவனின் உயிரைக் குடித்த சேறு… கதறி துடிக்கும் பெற்றோர்… சென்னையில் சோக சம்பவம்…!!!

Spread the love

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) கரிகாட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் – செல்லமீனா தம்பதியின் மகன் பிரகலாதன் (13). முட்டுக்காட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வந்த இவன், தற்போது கோடைக்கால விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளான். விடுமுறை நாட்களைப் பயனுள்ள வகையில் கழிக்க எண்ணிய பிரகலாதன், தனது நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பொழுதுபோக்கிற்காக அருகில் உள்ள கெனால் பகுதிக்கு இறால் பிடிக்கச் சென்றுள்ளான்.

இருவரும் கால்வாய் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பிரகலாதன் ஆழமான பகுதியில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளான். கால்வாயின் அடிப்பகுதியில் இருந்த சேற்றில் கால்கள் சிக்கிக்கொண்டதால், அவனால் வெளியே வர முடியாமல் போனது. இதில் பரிதாபமாக மூழ்கி பிரகலாதன் உயிரிழந்தான். அவனுடன் சென்ற நண்பர், இச்சம்பவத்தைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிலர் சிறுவர்கள் கெனால் பகுதிக்குச் சென்றதைக் கூறவே, சந்தேகம் அடைந்த தாய் செல்லமீனா கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், தண்ணீரில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சேற்றில் சிக்கிய நிலையில் பிரகலாதனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

மகனின் சடலத்தைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது. போலீசார் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிக்கச் சென்ற மாணவன், இறால் பிடிக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி.. தமிழகத்தில் தங்க நாணயங்கள் விற்பனை அதிரடி நிறுத்தம்.. சம்மேளனம் அறிவிப்பு..!!

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…

2 minutes ago

அடுத்த அதிர்ச்சி..! எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவிபறிப்பு… பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த புதிய செயலாளர் – கரூரில் இருதரப்பு மோதலால் பரபரப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…

5 minutes ago

மரண பயம் காட்டிய சூறாவளி.. தகர செட்-டை பிடித்தபடி வானில் பறந்த முதியவர்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…

7 minutes ago

இனி 0% கமிஷன் தான்… பழைய 43% கமிஷன் இனி செல்லாது… காண்ட்ராக்டர்களுக்கு விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி…!!!

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…

14 minutes ago

இனி கரண்ட் கட் இருக்காது..!பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் சீரான மின்சாரம் வழங்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி உத்தரவு..!!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அதிகாரிகளுடன்…

17 minutes ago

“கோயம்பேடு 66 ஏக்கர் நிலம் யாருக்கு?… அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகிறதா?… அன்புமணி ராமதாஸ் அதிரடி அட்டாக்… கிளம்பாக்கத்தை அடுத்து கிளம்பிய புதிய சர்ச்சை”…!!

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அங்குள்ள 36 ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்ட…

21 minutes ago