தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். மேலும், “முருகன் அருளால் தாங்கள் இணையும் கூட்டணி வரவிருக்கும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.
கூட்டணி முடிவெடுப்பதில் கட்சி நிர்வாகிகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தொண்டர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப ஒரு நல்ல முடிவை எடுக்கப்போவதாகவும் அவர் விளக்கமளித்தார். தமிழக அரசியலில் தற்போது ராமதாஸ், பிரேமலதா மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் இன்னும் இறுதி முடிவை அறிவிக்காமல் மௌனம் காத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் முடிவு தமிழகத்தின் தேர்தல் முடிவுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர், வளர்ப்பு நாயுடன் பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டது மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை…
பழைய பெருங்களத்தூர் பகுதியில் காதலித்து மணம் முடித்த பட்டதாரி பெண், கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத்தாரின் அலட்சியத்தால் தற்கொலை செய்து…
அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
திரைத்துறையில் இருந்து அரசியல் அரியணை ஏறிய முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து முழுவீச்சில் பணிகளைத் தொடங்கியுள்ளார். இருப்பினும்,…
தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…
அதிமுகவின் உள்கட்சிப் பூசல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களான 'நமது அம்மா'…