திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் தவெக நுழைந்துவிட்டது” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னதாகப் பேசியிருந்த நிலையில், இந்த நிகழ்வு அதற்குச் சான்றாக அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதே வேளையில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவாவால் தனது சொந்த மகளையே திமுகவில் தக்கவைக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தன் சொந்தக் குடும்பத்திலேயே மாற்றுக்கட்சியின் தாக்கத்தைத் தடுக்க முடியாதவர், பொதுமக்களை எவ்வாறு திமுகவின் பக்கம் தக்கவைப்பார் எனப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பி வருவதால், இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…