இரவோடு இரவாக தவெகவில் இணைந்தார் திருச்சி சிவாவின் மகள்.. திமுக MP-க்கு பெரிய அதிர்ச்சி….. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் தவெக நுழைந்துவிட்டது” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னதாகப் பேசியிருந்த நிலையில், இந்த நிகழ்வு அதற்குச் சான்றாக அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதே வேளையில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவாவால் தனது சொந்த மகளையே திமுகவில் தக்கவைக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தன் சொந்தக் குடும்பத்திலேயே மாற்றுக்கட்சியின் தாக்கத்தைத் தடுக்க முடியாதவர், பொதுமக்களை எவ்வாறு திமுகவின் பக்கம் தக்கவைப்பார் எனப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் மேடைகளிலும் காரசாரமாகக் கேள்விகளை எழுப்பி வருவதால், இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.