இந்த வக்ர பெயர்ச்சி காலத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபார வளர்ச்சி உண்டாகும். லாப ஸ்தானத்தில் சனி அமர்வதால், பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபமும், தொழிலை புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் தேடிவரும். அரசு தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியம் சிறப்பாகவும் இருக்கும்.
மிதுன ராசியினருக்கு இந்த காலகட்டம் தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் அதிகரிக்கும் நாள்களாக அமையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தருவதுடன், வேலை மாற்றம் செய்ய நினைப்பவர்களுக்கும் சாதகமான சூழல் உருவாகும். நிதி நிலைமை சீராக இருக்கும் இந்த நேரத்தில், குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்; வெளிநாடு செல்ல விரும்புபவர்களின் கனவுகளும் நனவாகும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றும் ஒரு பொன்னான காலமாக அமையவுள்ளது. குறிப்பாக, கடன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு பணவரவு திருப்திகரமாக இருப்பதால் நிதிப் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். மேலும், கணவன்-மனைவி இடையே இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிப்பதுடன், தொழில் ரீதியான முன்னேற்றமும் சிறப்பாக இருக்கும்.
