பெங்களூருவின் ராஜாஜிநகர் ராம் மந்திர் சாலை பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 53 வயது நபர் மீது காய்ந்த மரக்கிளை ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் அவர் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார். தனியார் நிதி நிறுவன ஊழியரான சுரேஷ் என்பவர், கடன் வசூல் பணிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த எதிர்பாராத விபத்து நேரிட்டுள்ளது. அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால், மரக்கிளை நேரடியாக அவரது தலையில் தாக்கியதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்து மயக்கமடைந்தார்.
இந்த அதிர்ச்சியூட்டும் விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விபத்து நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஓடிவந்து, பலத்த காயமடைந்த சுரேஷை மீட்டு அருகில் உள்ள ராஜாஜிநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து ராஜாஜிநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மரத்தை ஆய்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அரசியல் களம் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம்…
தமிழ்நாட்டை போதையற்ற மாநிலமாக மாற்றுவோம் என்ற உறுதியான முழக்கத்துடன், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு…
திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…
தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…