“மகன் திமுக” இதேபோல 2 வருஷம் கழிச்சி… அதை சொல்லி தவெகவில் இருந்து வெளியேருவாங்க… முன்னாள் மதிமுக பிரமுகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சாடல்..!!

Spread the love

மதிமுக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ள அரசியல் சூழலில் , முன்னாள் மதிமுக பிரமுகர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மதிமுகவின் அரசியல் பயணத்தை “மகன் திமுக” என்று சாடியுள்ளார் வைகோவின் 30 ஆண்டுகால அரசியல் முடிவுகளால் கட்சி தற்போது இந்த நிலைக்கு வந்து முடிவடைவதாகக் குறிப்பிட்டு, வைகோவின் பேச்சும் படிப்பறிவும் மட்டுமே ஒருவரை சிறந்த தலைவனாக்கி விடாது என்றும் விமர்சித்துள்ளார்

அவர் தனது பதிவில் மேலும் குறிப்பிடுகையில், “மறுமலர்ச்சி திமுக என்று தொடங்கி, மறுபடியும் திமுக என்று மாறி, தற்போது மகன் திமுக என முடிவுக்கு வருகிறது மதிமுக” என்று சாடியுள்ளார். அதோடு மட்டுமன்றி, “இன்று திமுகவை என்னவெல்லாம் சொல்லி வைகோ வெளியே வருகிறாரோ, அதையே சில வருடம் கழித்து தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) சொல்லி வெளியே வருவார்” என்று எதிர்காலக் கூட்டணி நகர்வுகளையும் சாடி எதிர்வுகூறியுள்ளார் . வைகோவிற்காகத் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன் போன்ற தியாகிகளின் ஆன்மாக்கள் இப்போதுதான் அமைதிபெறும் என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டுள்ளார்

Soundarya

Recent Posts

BREAKING: “ராஜினாமா செய்ய மாட்டேன்” வைகோவின் உத்தரவை அதிரடியாக மறுத்த மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன்… அரசியலில் திடீர் டுவிஸ்ட்..!!

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கடையநல்லூர் தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. இராசேந்திரன், தனது பதவியை ராஜினாமா செய்ய…

14 minutes ago

என்னைக் காப்பாத்துங்க… அன்பு ஆபத்தாய் மாறிய விநோதம்… குரங்குகளுக்கு பழம் கொடுத்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?… தூத்துக்குடியை உலுக்கிய மரணம்…!

தூத்துக்குடி மாவட்டத்தில் குரங்குகள் சூழ்ந்ததால் ஏற்பட்ட பதற்றத்தில், மலை உச்சியிலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம்…

15 minutes ago

பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…

24 minutes ago

25 வயதிலேயே மாரடைப்பா?… ‘ஈஸ்ட்ரோஜன்’ தீர்ந்ததும் பெண்களுக்கு வரும் ஆபத்து… திடீரென மாரடைப்பு ஏற்பட்டால் பதறாமல் முதலில் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்…!

மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…

32 minutes ago

“இது பொய்யாக இருக்கக்கூடாதா..?” இயக்குநர் பாக்யராஜ் மறைவு குறித்து சீமான் உருக்கம்..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…

38 minutes ago

மதிமுக வெளியேறியதற்கு இதுதான் காரணமா..? திருமண விழாவில் ஸ்டாலின் – வைகோ இடையே நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி..!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…

41 minutes ago