பங்காளிகளின் வெறிச்செயல்..! நிலத்துக்காகப் பிறந்த உடன்பிறப்புகளைத் தீர்த்துக்கட்டிய உறவினர்கள்.. தருமபுரியை உலுக்கிய இரட்டைக் கொலை..!!

Spread the love

தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் தகடூர் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சம்மாள் (50) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களது வீட்டில் இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததை அடுத்த வீட்டுக்காரர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக தருமபுரி நகரக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தருமபுரி டி.எஸ்.பி சிவராமன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களைக் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், உறவினர்களுடன் நீண்ட நாட்களாக நிலவி வந்த கடுமையான சொத்து தகராறு காரணமாகவே இந்த இரட்டைக் கொலை அரங்கேறியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பேசிய டி.எஸ்.பி சிவராமன், கொலைக்கான முழுமையான பின்னணி மற்றும் சதியை வெளிக்கொண்டுவர தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இந்த இரட்டைக் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைப் பிடிக்கவும், கொலைக்கான முக்கியக் காரணத்தைக் கண்டறியவும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Soundarya

Recent Posts

“அம்மா.. என்னால முடியல”!… செல்போனை பிடுங்கி டார்ச்சர்… திருமணமாகி 4 மாதம் … புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நடந்தது என்ன?…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள எச்சூரைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான ராஜேஸ்வரிக்கும், படப்பை அடுத்த அழகூரைச் சேர்ந்த சட்டப்…

42 seconds ago

“வேலைக்கு போன மனைவி வரல”… 5 நாட்கள் மர்மம்… முட்புதரில் நர்ஸ் சடலம்… கொலையாளி யார் தெரியுமா?… வெளிவந்த உண்மை…!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த ரஞ்சித்குமாரின் மனைவி உத்திரா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்…

9 minutes ago

8 வயது சிறுமி எங்கே?… சிசிடிவியில் சிக்கியதா க்ளூ?… துர்கா பூஜைக்குச் சென்ற தாய்… 3 நாட்களாகத் தொடரும் மர்மம்… தீவிர தேடுதல் வேட்டை…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் 8 வயது மகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம்…

52 minutes ago

ஒரு நொடி கவனக்குறைவு… செல்ஃபி ஆசை… எமனாக வந்த லாரி… 4 உயிர்களைப் பறித்த விபரீதம்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சிவ்புரியைச் சேர்ந்த ஏழு நண்பர்கள், மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோயிலுக்குச் சென்று…

60 minutes ago

அடகடவுளே..! மன உளைச்சலா?… “அப்பா படம் பார்க்க கூட்டிட்டு போறாரு”… துள்ளிக்குதித்து காரில் ஏறிய பிஞ்சுகள்… நடுவழியில் நேர்ந்த பயங்கரம்…!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் தாக்கட் என்பவர் வருவாய்த் துறையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.…

1 மணத்தியாலம் ago

பாதுகாப்பு எங்கே?… 16 வயது சிறுமியின் உயிரைப் பறித்த கொடூரம்… முட்புதரில் கிடந்த சடலம்… பிஞ்சு வயதில் பறிபோன உயிர்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில்…

1 மணத்தியாலம் ago