ரெடிட் சமூக வலைதளத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பிரிட்டனைச் சேர்ந்த அந்த இளைஞர், தான் ஒரு பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலில் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தனது காதலியின் நீண்ட நாள் ஆசையான, இந்திய மதிப்பில் சுமார் ரூ.3.1 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கேமிங் பிசி யை அவரது பிறந்தநாளுக்காகப் பரிசாக வாங்கியுள்ளார். ஆனால், அந்தப் பரிசைப் பெற்ற அடுத்த நாளே அவரது காதலி அவரிடம் பிரேக்அப் செய்து உறவை முறித்துக் கொண்டுள்ளார். இதனால் அந்த இளைஞர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்தத் திடீர் பிரிவால் நிலைகுலைந்த இளைஞர், பின்னர் தனது காதலியின் தோழிகள் மூலம் அதிர்ச்சிகரமான உண்மை ஒன்றை அறிந்தார். அவரது காதலி பல மாதங்களுக்கு முன்பே இந்த உறவை முறித்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார். ஆனால், பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த கேமிங் பிசி பரிசு கிடைக்கும் என்பதை அறிந்ததால், அதுவரை பிரேக்அப் செய்யாமல் நாடகமாடி காத்துக்கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. இதற்கான ஆதாரங்களாக, காதலி தனது தோழிகளுடன் பகிர்ந்துகொண்ட குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டுகளையும் அந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர், பிரிட்டன் சட்டப்படி அந்த கணினி காதலிக்குச் சொந்தமானதாகக் கருதப்பட்டாலும், அவர் காதலி என்ற முறையில் மட்டுமே தான் அவ்வளவு பணம் செலவழித்ததாகக் கூறியுள்ளார். தான் திட்டமிட்டுப் பயன்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டதால், தற்போதைய சூழ்நிலையில் தனது பணத்தையோ அல்லது அந்த கேமிங் பிசியையோ சட்டப்பூர்வமாகத் திரும்பப் பெற முடியுமா என்று நெட்டிசன்களிடம் அவர் சட்ட ஆலோசனை கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என…
தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்…
தமிழக பட்ஜெட்டில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு 'அண்ணன் சீர்' எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின்…
தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தைச் சட்டமன்றத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மாநிலத்தின்…
அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு அரசுத் துறை கல்லூரிகளில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்குத் தலா ரூ,8,000 வழங்கும் புதிய திட்டமானது இன்றைய…