பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி நடக்கும் மோசடிகள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் கீதம் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரை மிகச் சாமர்த்தியமாக ஏமாற்றிப் பணம் பறித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி, மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசரத்தில் இருப்பவர்கள் மற்றும் மொபைல் போன்களில் மூழ்கியிருக்கும் வாடிக்கையாளர்களே இதுபோன்ற மோசடிகளுக்கு எளிதில் பலியாகிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
இந்த மோசடி சம்பவத்தின் போது, அந்தப் பெண் ஊழியர் பெட்ரோல் போடும் இயந்திரத்தின் மீட்டரை முழுமையாக பூஜ்ஜியத்திற்கு கொண்டு வராமல், ஏற்கனவே பதிவாகியிருந்த 200 ரூபாயிலிருந்தே கணக்கைத் தொடங்கியுள்ளார். பின்னர், வாடிக்கையாளரை பேச்சில் திசை திருப்பி, பணம் ரொக்கமாக செலுத்தப்படுகிறதா அல்லது ஆன்லைனா எனக் கேட்டு அவரது கவனத்தை முழுமையாக திசை திருப்பியுள்ளார். வாடிக்கையாளர் 500 ரூபாய்க்கு பெட்ரோல் கேட்க, மெஷினில் 500 ரூபாய் என காட்டியதும் அவர் வண்டியை எடுத்துள்ளார். ஆனால், உண்மையில் முந்தைய 200 ரூபாய் கணக்கையும் சேர்த்து 300 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் வெறும் ஒரு நிமிடத்திற்குள் அந்த வாடிக்கையாளர் 200 ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும், அந்த வாடிக்கையாளர் ஒரு உள்ளடக்க உருவாக்குநராக இருந்ததால், இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் தனது இருசக்கர வாகனத்தில் 360 கேமராவைப் பொருத்தியிருந்ததால், பெண் ஊழியரின் இந்த முழு கைவரிசையும் அதில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்குகளில் நடக்கும் இத்தகைய அத்துமீறல்கள் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கவலைகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், பெட்ரோல் போடும் போது மீட்டர் பூஜ்ஜியத்தில் உள்ளதா என்பதை எப்போதும் கவனமாகப் பார்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர்.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…