தமிழ்நாடு வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிகபட்சமாகப் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,571 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ₹8,393 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகச் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் சேர்த்து, இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் விளையாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடியும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.2,022 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் சமூக நீதித்துறைக்கு ரூ.3,937 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என…
தமிழக பட்ஜெட்டில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு 'அண்ணன் சீர்' எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின்…