தமிழக பட்ஜெட்டில் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘அண்ணன் சீர்’ எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பெண்களின் திருமணத்தின் போது அவர்களுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் அரசு சார்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய நலத்திட்டத்திற்காகத் தமிழக அரசு சார்பில் ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி, பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டமானது தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்றும் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் வேளாண் பெருமக்களுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என…