விநாடிக்கு 2,831 லிட்டர் தண்ணீரை உள்வாங்கும்…! நெல்லை அதிசய கிணறுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அறிவியல் காரணம் என்ன தெரியுமா…?

Spread the love

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளத்தில் இருக்கும் ஒரு ‘அதிசயக் கிணறு’, விநாடிக்குச் சுமார் 2,831 லிட்டர் தண்ணீரை உள்வாங்கும் அபார திறன் கொண்டதாக உள்ளது. கருமேனியாறு கால்வாயில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் எவ்வளவு வந்தாலும், கிணறு நிரம்பாமல் உள்வாங்கிக் கொண்டே இருப்பது இதன் தனிச்சிறப்பு.

இதன் காரணமாக இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகப் பெருகுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கிணற்றின் அறிவியல் பின்னணியை அறிந்துகொள்ள, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சென்னை ஐஐடி பேராசிரியர்களை வரவழைத்து ஆய்வு செய்யக் கோரியது.

மூன்று மாத ஆய்வுக்குப் பிறகு, ஆய்வாளர்கள் சில உண்மைகளைக் கண்டறிந்தனர். இந்தக் கிணற்றுக்கு அடியில் சுண்ணாம்புப் பாறைகள் அதிகமாக உள்ளன. மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன், பாறைகளுடன் வேதிவினை புரிவதால், காலப்போக்கில் பெரிய துவாரங்கள் மற்றும் பூமிக்கடியில் குகைகள் உருவாகியுள்ளன.

இந்தக் குகைகள் மற்றும் இயற்கையான நிலத்தடி நீர்க் கால்வாய் அமைப்பு காரணமாக, கிணறு அதிக நீரை உள்வாங்கி, அதைச் சேமித்து வைத்து, நிலத்தடி நீர் மட்டங்களுக்கு விரைவாக அனுப்புகிறது. எனவே, ஆயன்குளம் கிணறு என்பது சுண்ணாம்புப் பாறைகள் நிறைந்த நிலத்திற்கு அடியில் உள்ள ஆறு போன்ற அமைப்பாக மாறியுள்ளது என்று அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

2 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

2 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

2 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

3 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

3 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

3 மணத்தியாலங்கள் ago