தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் என அனைத்தும் இந்த தேர்தலை குறியாக உள்ளன. தேர்தல் ஆணையமும் அதன் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில் பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற கையுடன் தமிழகம் நோக்கி திரும்பி உள்ள பாஜக அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. அதிமுகவின் தலைமையில் கூட்டணி அமைந்தாலும் அதனை கட்டுப்படுத்துவது அமித்ஷா தான் என்று எதிர்க்கட்சிகளும் அரசியல் ஆர்வலர்களும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே சில நிகழ்வுகளும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதன்படி அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையை சரி செய்ய மூத்த நிர்வாகிகள் பலரும் டெல்லி சென்று அமித்சாவை சந்தித்து பேசி இருந்தனர். அண்மையில் கூட ஓபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் டெல்லி சென்ற நிலையில் டிசம்பர் 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள மற்றொரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது டிசம்பர் 15ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் தமிழகத்திற்கு வந்தவுடன் முதல் வேலையாக எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. அந்த பேச்சு வார்த்தையில் அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைப்பது பற்றியும் அண்ணாமலையை மீண்டும் மாநில தலைவராக நியமிப்பது பற்றியும் பேச உள்ளதாக தெரிகிறது. மேலும் முக்கியமாக தமிழக தேர்தலில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு மற்றும் ஆட்சியில் பங்கு குறித்து அமித்ஷா நேரடியாக பேச உள்ளாராம். இதனால் அமித்ஷாவின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே தற்போது பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…