“மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்…!” சொந்த கட்சி அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அண்ணா அறிவாலயத்தில் வைத்து சேகர்பாபு கொடுத்த நெத்தியடி பதில்…!!

Spread the love

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குன்னூர் விநாயகர் கோவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், இந்த கார் பார்க்கிங் வரம்புக்கு மீறி கட்டப்பட்டதாக தற்போதைய அமைச்சர் குற்றம் சாட்டியதாகவும், அதற்குப் பேரவையில் பதிலளிக்கத் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குன்னூர் கோவிலுக்கு கார் பார்க்கிங் தேவை என்ற கோரிக்கையின் அடிப்படையில், மருதமலை கோவில் அறங்காவலர்களின் முறைப்படியான தீர்மான ஒப்புதலுடன், அங்கிருந்து கடன் பெற்று இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

குன்னூர் ஒரு முக்கிய சுற்றுலாத் தலம் என்பதால், அங்கு நிலவும் வாகன நெரிசலைக் குறைக்கவும், கோவில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தவுமே இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டப்பட்டது என்று சேகர்பாபு குறிப்பிட்டார். இதன் மூலம் கிடைக்கும் வணிக ரீதியிலான வருவாயைக் கொண்டு, ஊட்டியில் உள்ள 52 நலிவடைந்த திருக்கோவில்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையுடன்தான் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது என்றும், தற்போதைய அமைச்சர் இதன் உண்மை நிலையை உணராமல் அவசரகதியில் பேசுவதாகவும் அவர் சாடினார்.

சட்டப்பேரவையில் அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கருத்து கூற அனுமதி மறுக்கப்படுவது வழக்கம் தான் என்றும், நேற்றைய தினமும் அதுவே நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இத்திட்டத்திற்கான அனுமதி இதுவரை ரத்து செய்யப்படவில்லை என்றும், நலிவடைந்த கோவில்களை மேம்படுத்தும் இந்த அறிவார்ந்த நடவடிக்கையை அனைவரும் வரவேற்பார்கள் என்றும் கூறினார். இறுதியாக, அடிக்க அடிக்க உயரும் பந்து போல தி.மு.க மேலும் மேலும் நிமிர்ந்து நிற்குமே தவிர, இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாது என்றும் சேகர்பாபு தெரிவித்தார்.

Swetha

Recent Posts

BREAKING: முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது விவகாரம்…! நீதிமன்றத்தின் அதிரடி முடிவு…!!

ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…

14 minutes ago

நடமாட முடியாத முதியவரா நீங்கள்?… வீட்டு வாசலிலேயே இலவச சேவை… ஓய்வூதியதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி… EPFO கொண்டுவந்த சூப்பர் திட்டம்…!!

இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…

15 minutes ago

“ஈடு செய்ய முடியாத இழப்பு…” இரண்டு சிறு குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற டாக்டர் பிரீதி காஷ்யப்… திடீர் மறைவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…

20 minutes ago

வரலாறு காணாத உச்சத்தில் சர்க்கரை விலை… சாமானியர்களுக்கு காத்திருக்கும் பெரும் அதிர்ச்சி… அடுத்த 3 மாதங்களுக்கு நீடிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை…!!

இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…

32 minutes ago

என் வாழ்க்கைக்கு என்ன பதில்…? காதலன் வீட்டு வாசலில் 7 மாத கர்ப்பிணி… ஹால்பிடலில் தொடங்கிய காதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அருணா என்ற பெண்ணும் சிரவன் என்பவரும் முதன்முறையாகச் சந்தித்துப் பழகியுள்ளனர்.…

32 minutes ago

“விட்ருங்க அங்கிள்… துடித்த 15 வயது சிறுமி…” தரதரவென இழுத்து வந்து மரத்தில் கட்டி வைத்த கும்பல்… தர்ம ஆடி கொடுத்த மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…

45 minutes ago