“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

Spread the love

“என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத் தொடவே கூடாது..” – இது கான்பூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பிரியான்ஷு ஸ்ரீவஸ்தவாவின் கடைசி ஆசையாகும். கடந்த 2025-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த பிரியான்ஷு, கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை, சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நீதிமன்றத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில், மாலை 3:30 மணியளவில் நீதிமன்றக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பிரியான்ஷு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் துயரமான முடிவை எடுப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே, பிரியான்ஷு தனது வாட்ஸ்அப் (WhatsApp) ஸ்டேட்டஸில் இரண்டு பக்க தற்கொலை குறிப்பை பதிவிட்டிருந்தார். தனது தந்தையின் தினசரி ஏளனப் பேச்சுகள், வசவுகள் மற்றும் மிரட்டல்களால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். “இப்படி ஒரு தந்தை யாருக்கும் கிடைக்கக்கூடாது” என்று பதிவிட்டுள்ள அவர், தான் 6 வயதாக இருந்தபோது பிரிட்ஜில் இருந்த மாம்பழ ஜூஸைக் குடித்ததற்காக, தனது தந்தை தன்னை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியே துரத்திய பழைய வடுக்களையும் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட அந்த ஆழ்ந்த மனக்காயங்கள் ஆறாமல், காலப்போக்கில் பெருகிக்கொண்டே சென்றதால், தனது 24-வது வயதில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

Soundarya

Recent Posts

உஷார்! உங்க போனுக்கும் இந்த மெசேஜ் வரலாம்… வடமாநில கும்பலின் மார்பிங் மிரட்டலுக்கு பலியான 20 வயது இளைஞர்… வெறும் 3000 ரூபாய் கடனுக்கு இப்படியா…!

ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

8 minutes ago

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

25 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

49 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

53 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

56 minutes ago