ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி வந்த டிரம்ப், திடீரென இந்த முடிவை எடுத்ததற்குப் பின்னால் அமெரிக்கா எதிர்கொண்டுள்ள கடும் ஆயுதத் தட்டுப்பாடே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. போரின் தொடக்கத்தில் ஈரானின் குறைந்த விலை ட்ரோன்களை அழிக்க, அமெரிக்கா தனது பல மில்லியன் டாலர் மதிப்புள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்தியதால், தற்போது அதன் ஏவுகணை இருப்பு பாதியாகக் குறைந்துள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கடந்த ஏழு வாரப் போரில் அமெரிக்கா தனது துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் 45 சதவீதத்தையும், ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளில் 50 சதவீதத்தையும் இழந்துள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதே நிலையில் போர் நீடித்தால், சீனா போன்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவாகக் களமிறங்கினால் அமெரிக்கா பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என அஞ்சப்படுகிறது. புதிய ஆயுதங்களைத் தயாரித்துப் பெற குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும் என்பதால், தற்போதைய ராணுவச் சிக்கல்களைச் சமாளிக்கவே டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், போர்நிறுத்த நீட்டிப்பிற்கும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…
ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முக்கிய முகமாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராகவ் சதா, திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய…