ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர் எறும்புகளை ஒன்றாகச் சேகரித்து, அவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நேரடியாக நெருப்பில் வைத்து வாட்டுவதும், பின்னர் ஒரு கனமான பொருளைக் கொண்டு அவற்றை நசுக்குவதுமான காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த கொடூரமான செயல் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைப்பதோடு, பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். எறும்புகள் போன்ற சிறிய உயிரினங்களாக இருந்தாலும், அவற்றை இதுபோன்று திட்டமிட்டு சித்திரவதை செய்வது அப்பட்டமான விலங்கு வதை என்றும், இது வெறும் பொழுதுபோக்கு அல்ல, ஒருவிதமான மனநோய் என்றும் பலர் விமர்சித்துள்ளனர். வெறும் பார்வைகளைப் (Views) பெறுவதற்காக இத்தகைய வன்முறையான உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது…
அதிமுகவின் மூத்த தலைவரும் கொங்கு மண்டலத்தின் அசுர பலமிக்க அரசியல் முகமுமான எஸ்.பி. வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மீதான தனது…
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ப்ளூம்ஃபீல்ட் பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இசைக்குழு இயக்குநர் டேனியல் பர்பேங்க் (37) என்பவர்,…
அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அதிருப்திப் புயல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தின் வலுவான…
உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் வேளையில், முன்னணி AI நிறுவனங்களான OpenAI மற்றும்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும்…