BIG NEWS: “அந்த ஒரு சாக்லேட்… கதறிய பெற்றோர்”…. வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 18 மாணவர்கள்… செஞ்சி பள்ளியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் பயங்கரம்….!

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி – விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலை பள்ளியில், இன்று காலை பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சாக்லேட் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவர்கள் 18 பேர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் வழக்கம்போல வகுப்புகள் தொடங்கிய நிலையில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக வகுப்பு தோழர்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கியுள்ளார். சாக்லேட்டை வாங்கி சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு அடுத்தடுத்து கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதில் சில மாணவர்கள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததால் பள்ளி வளாகத்தில் பெரும் பதற்றமும் அச்சமும் நிலவியது.

மாணவர்களின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர்கள், உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட 18 மாணவர்களையும் மீட்டுச் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழு, அவர்களுக்கு ‘ஃபுட் பாய்சனிங்’ எனப்படும் உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தது. உடனடியாக மாணவர்களுக்குக் குளுக்கோஸ் மற்றும் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. தற்போது அனைத்து மாணவர்களும் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இருப்பினும், இத்தகவல் பரவியதால் மருத்துவமனை வளாகத்தில் பெற்றோர்கள் பதற்றத்துடன் குவிந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செஞ்சி போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாணவர் விநியோகித்த சாக்லேட்டுகள் காலாவதியாகி ஓராண்டுகள் ஆனது தெரியவந்துள்ளது. இவ்வளவு காலம் கடந்த காலாவதியான சாக்லேட்டுகள் கடைகளில் விற்கப்பட்டதா அல்லது தரம் குறைந்த போலி சாக்லேட்டுகளா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அப்பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

10 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

23 minutes ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

48 minutes ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

55 minutes ago

அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…

59 minutes ago

பருமன் உள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவுவது ஏன்…? மருத்துவ உலகையே உலுக்கிய புதிய கண்டுபிடிப்பு… ஆய்வின் வெளியான அதிர்ச்சி தகவல்…!

உடல் பருமன் என்பது வெறும் தோற்றம் சார்ந்த விஷயம் அல்ல; அது நீரிழிவு, இதய நோய் போன்றவற்றுடன் சில வகையான…

1 மணத்தியாலம் ago