“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஆளுங்கட்சியான திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்திருந்த நிலையில், தவெகவின் இந்த வெற்றி அரசியல் வட்டாரங்களை அதிரவைத்துள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு மேலும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தவெகவிற்கு ஆதரவளித்து புதிய கூட்டணியை உருவாக்கின.

இதேவேளையில், அதிமுகவின் ஒரு பிரிவு எம்.எல்.ஏ-க்கள் தவெகவிற்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பிடிக்கத் திட்டமிட்டனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அதிருப்தியடைந்த எம்.எல்.ஏ-க்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், பி. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவிகளைத் துறந்து அதிகாரப்பூர்வமாக தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

மறுபுறம், முதலமைச்சர் விஜய் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதியைச் சட்டப்படி ராஜினாமா செய்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா மற்றும் விஜய்யின் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் விரைவில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தவெகவின் இந்த அசுர வளர்ச்சியால் பலம் வாய்ந்த பழைய கூட்டணிக் கட்சிகளை இழந்த திமுக, தற்போது தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் மட்டுமே கைகோர்த்து இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த அரசியல் சவால்களை முறியடித்து, இடைத்தேர்தல் நடைபெறும் 7 தொகுதிகளிலும் தங்களின் பலத்தை நிரூபிக்க திமுக தலைமை தீவிர வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலாக மதுராந்தகம் தொகுதி நிர்வாகிகள் அழைக்கப்பட்டு, அங்குள்ள கள நிலவரம் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் வரவிருக்கும் மற்ற தொகுதிகளின் நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து ஆலோசித்து, அனைத்து இடங்களிலும் வெற்றிக் கொடியை நாட்ட திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு வருகிறார்.

Nanthini

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

18 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

39 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

51 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

1 மணத்தியாலம் ago

BREAKING: “மரணத்தை விட கொடியது”…. அதிமுகவில் இருந்து வைகைச் செல்வன் விலகல்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…

2 மணத்தியாலங்கள் ago