அப்படி போடு… பெரம்பூர் மக்களே ரெடியா?… புகார் கொடுத்த சில நொடிக்ளிலயே தீர்வு… மக்களுக்காக அதிரடி முடிவெடுத்த முதல்வர் விஜய்… பெரம்பூர் தொகுதிக்கு வந்த புதிய அதிரடி மாற்றம்…!

Spread the love

சென்னை மாவட்டத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான பெரம்பூரில், கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் வென்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக நீடித்து வருகிறார். இதனால், தனது தொகுதி மக்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் முதல்வர் விஜய், பெரம்பூர் மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் வகையில் ‘மக்கள் சேவைத் தளம்’ என்ற பிரத்யேக மொபைல் செயலியைவிரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், செயலி குறித்த அறிமுக வீடியோவும் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரத்யேக செயலி மூலம் பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எந்தவொரு அரசு அலுவலகத்திற்கும் அலையாமல், வீட்டில் இருந்தபடியே தங்கள் புகார்களைப் பதிவு செய்ய முடியும். குறிப்பாக, குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகள், எரியாத தெருவிளக்குகள் போன்ற அடிப்படைப் பிரச்னைகள் முதல் கல்வி, மருத்துவம், மின்சாரம், நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் அவசர உதவிகள் வரை அனைத்து வகையான கோரிக்கைகளையும் இந்த செயலியில் நேரடியாக சமர்ப்பிக்கலாம். பொதுமக்கள் தங்கள் வார்டு வாரியாக உள்ள உள்ளூர் பிரச்னைகளை மிக எளிதாகத் தட்டச்சு செய்து, தங்களின் தேவைகளைத் தொகுதி நிர்வாகத்தின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்ல இந்தத் தளம் வழிவகை செய்கிறது.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரு தளங்களிலும் கிடைக்கவுள்ள இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து, பெயர் மற்றும் மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டுப் பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தலாம். செயலியில் உள்ள ‘புதிய கோரிக்கை’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்து, தங்களின் வார்டு எண், தெரு மற்றும் பிரச்னையின் வகையைக் குறிப்பிட்டுப் புகாரைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சில நொடிகளிலேயே, அந்தப் புகார் பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை அடைந்துவிடும். அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் புகார் டிக்கெட் எண் (Ticket Number) மற்றும் பிரச்னை தீர்க்கப்படும் தற்காலிகத் தேதியுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த டிக்கெட் எண்ணை வைத்துத் தங்களின் புகாரின் தற்போதைய நிலையைத் தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் நேரடியாகக் கண்காணித்துக் கொள்ளும் வகையில் இந்தச் செயலி அதிநவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Visaka

Recent Posts

BREAKING: சம்பளம் உயர்ந்தது.. சற்றுமுன் தமிழக அரசு அறிவிப்பு… அரசு ஊழியர்களுக்கு வந்த செம ஹேப்பி நியூஸ்….!

தமிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக அரசு…

6 minutes ago

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

14 minutes ago

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

24 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

31 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

40 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

46 minutes ago