தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக இன்று (ஜூலை 3) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால், இன்றைய விசாரணைக்கு அவரால் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமைச்சரின் வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் எ.வ. வேலு தற்போது சிங்கப்பூரில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அங்கு அவர் சுமார் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிகிச்சை முடிந்து சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பியவுடன், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் அவரது தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஜான்சி மாவட்டம் சிர்கானா காவல் எல்லைக்குட்பட்ட சிச்சோரா கிராமத்தைச் சேர்ந்த ராம்தீன், மகன்கள் இல்லாததால் தனது பேத்தி கஞ்சனைச் சொந்த…
பாதுகாப்புத் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு நற்செய்தியாக, பணியாளர் தேர்வாணையம் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல்லி…
செப்டம்பர் 17 ஆம் தேதி தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரின் பிறந்தநாளாக அமைவது தமிழக அரசியலில்…
சோஷியல் மீடியா உலகில் 13 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு பிரபலமான ராஜஸ்தானைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்ஸர் திஜாரா வைன்ஸ் , அண்மையில்…
தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே…
சென்னைப் பெரம்பூரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து…