“வைகோ, திருமாவளவனுக்கு செக் வைத்த காங்கிரஸ்”… விஜய் தேர்வு செய்த ‘அந்த’ ரகசிய பெயர்… தவெக கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி ஆட்சியை ஒரு பலமான கூட்டணியாக மாற்றுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டணிக்கான பெயர் சூட்டுதல், ஒருங்கிணைப்பாளரை நியமித்தல், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கிய கோட்பாடுகள் விவாதிக்கப்பட்டன. இருப்பினும், இக்கூட்டத்தில் எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படாததால், தற்போதைய சூழலில் கூட்டணி கட்சிகளிடையே சில கருத்து வேறுபாடுகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

கூட்டணிக்கான பெயரைத் தேர்வு செய்வதில் சுவாரசியமான விவாதங்கள் எழுந்துள்ளன. தமக்கான ஒரு பெயரை விஜய் ஏற்கனவே தேர்வு செய்து வைத்திருந்தாலும், அதை தற்போதைக்கு ரகசியமாக வைத்துள்ளார். தலைவர்களிடம் பேசும்போது, “நீங்களும் யோசியுங்கள், அடுத்த கூட்டத்தில் முடிவு செய்து கொள்ளலாம்” என்று விஜய் தற்காலிகமாக விடை கொடுத்துள்ளார். எனினும், விஜய் தரப்பில் ‘மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி’, ‘தமிழக வெற்றிக் கழக சமூக நீதி கூட்டணி’, ‘தமிழக சமூக நீதி கூட்டணி’, ‘சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ ஆகிய 4 பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது. இதில் ‘மதசார்பற்ற சமூக நீதி கொள்கை கூட்டணி’ (செக்யூலர், சோசியல் ஜஸ்டிஸ், பாலிசி) என்ற பெயர் கொள்கை ரீதியாகப் பொருத்தமாக இருக்கும் என சில தலைவர்கள் ஆமோதித்துள்ளனர்.

பெயர் தேர்வு ஒருபுறமிருக்க, கூட்டணியின் ‘ஒருங்கிணைப்பாளர் யார்?’ என்ற கேள்வியில்தான் கட்சிகளிடையே பலத்த மோதல் வெடித்துள்ளது. தவெகவின் சீனியர் அமைச்சர்கள், துரை வைகோவின் மறைமுக முயற்சியால், அனுபவம் வாய்ந்த வைகோவை ஒருங்கிணைப்பாளராக முன்னிறுத்துகின்றனர். மத்தியில் உள்ள ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிய அவரது நீண்டகால அனுபவம் கூட்டணிக்குப் பலம் சேர்க்கும் என்பது அவர்களின் வாதம். ஆனால், தவெகவின் ஆதவ் அர்ஜுனா இதனை ஏற்கவில்லை. இந்த கூட்டணிக்குள் திருமாவளவனை அழைத்து வந்த பெருமை இவரையே சேரும் என்பதால், சமூக நீதிக்கு வலுசேர்க்கும் வகையில் திருமாவளவனையே ஒருங்கிணைப்பாளர் ஆக்க வேண்டும் என்று அவர் பிடிவாதமாக உள்ளார்.

இந்த வைகோ-திருமாவளவன் போட்டியைத் தாண்டி, தேசிய கட்சியான காங்கிரஸும் இந்த பதவிக்குக் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் பேசிய மாணிக்கம் தாகூர், கூட்டணியில் தவெகவுக்கு அடுத்தபடியாக இருக்கும் பெரிய சக்தி காங்கிரஸ்தான் என்றும், மத்தியில் உள்ள பாஜக அரசியலை எதிர்கொள்ள காங்கிரஸுக்கே ஒருங்கிணைப்பாளர் பதவி தரப்பட வேண்டும் என்றும் அழுத்தமாகப் பேசியுள்ளார். காங்கிரஸில் தகுதியான தலைவர்கள் பலர் இருப்பதால், ராகுல் காந்தியுடன் ஆலோசித்து இறுதிப் பெயரை அறிவிப்பதாக அவர் கூறியுள்ளார். இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் பதவிக்காகத் தலைவர்களிடையே முளைத்துள்ள முக்கோணக் கருத்து வேறுபாடுகளை, முதல்வர் விஜய் எவ்வாறு சரிசெய்து அடுத்தக்கட்ட நகர்வை நோக்கிச் செல்லப் போகிறார் என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும்.

Nanthini

Recent Posts

ஆதார் கார்டில் புதிய இமெயில் அப்டேட்… இனி எல்லாமே ஃப்ரீ…! எப்படி தெரியுமா…? UIDAI அதிரடி அறிவிப்பு…!!

இந்தியர்களின் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டில் உள்ள விவரங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI…

6 minutes ago

“நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்!”… தன் மரணச் செய்திக்கு ‘MBA சாய்வாலா’ பிரஃபுல் பில்லோரே கொடுத்த அதிரடி பதில்…!

'எம்பிஏ சாய்வாலா' என்று மக்களால் பரவலாக அறியப்படும் பிரபல இளம் தொழிலதிபர் பிரஃபுல் பில்லோரே, தான் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில்…

7 minutes ago

“ஓடும் காரில் ரொமான்ஸ்…? ரோட்டை பார்த்து ஓட்டாததால் நேர்ந்த விபரீதம்..! அரைகுறை ஆடையுடன் தம்பதி சிக்கிய வீடியோவால் இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!”

சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…

14 minutes ago

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

18 minutes ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் போட்ட ஸ்கெட்ச்… கதறும் TVK முக்கியப் புள்ளிகள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

31 minutes ago

“ஈரான் தலைவர்களைக் கொல்ல துடித்த இஸ்ரேல்”.. நடுவழியில் புகுந்து அமெரிக்கா செய்த பகீர் காரியம்… வளைகுடா நாடுகளை அதிரவைத்த அந்த ரகசிய மெசேஜ்….!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…

36 minutes ago